நேப்கின்கள் வரமா?சாபமா?


ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நிகழக்கூடிய இயற்கையான நிகழ்வு.பெண்ணானவள் பூப்பெய்தியவுடன் அவளுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்தான் இந்த மாதவிடாய்.ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஆகும் முன்னர் அதாவது பதினான்காவது நாள் பெண்ணிற்கு சினைமுட்டை உருவாகும் .இது மாதாமாதம் நடக்கும் நிகழ்வு.இப்படி மாதமாதம் நிகழும் சுழற்சியில் ஆணின் விந்தணு சரியான முறையில் சென்றால் அது கருவாக(குழந்தையாக) உருவாகும் ,அப்படி கருவாக உருவாகாத நிலையில் கருப்பை சுவர்களில் தேங்கி ஒவ்வொரு மாதமும் மாதவிடாயாய் வெளிப்படும்.
இந்த நேரத்தில் உடலானது முழு வெப்பநிலையில் இருக்கும் எனவேதான் மூன்று நாட்கள் தலைகுளிக்கக்கூடாது என்கிறார்கள் .அப்படி தலைக்குளியல் எடுத்துக்கொண்டால் உடலின் வெப்பநிலையானது குளிர்விக்கப்பட்டுவிடும் உடலில் கழிவுகள்(உதிரப்போக்கு) அப்படியே சரியாக வெளியேறாமல் தேங்கிவிடும் . இந்த கழிவே சரியாக வெளியேற்றப்படாததால் பிற்காலத தில் கருப்பை கேன்சர்,பி.சி.ஓடி எனப்படும் நீர்கட்டி ஆகியவை வருவதற்கு காரணிகளாக மாறுகிறது.
அந்த காலத்தில் பயன்படுத்திய காட்டன் துணிகளை கிழித்து நேப்கினாக வைத்துக்கொண்டார்கள்.இன்று பல நேப்கின்கள் விதவிதமான பெயரில் பல அடுக்குகள் கொண்டது,அப்படி இப்படியென கதைகட்டி விற்கிறார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள்.நாம் நேப்கினை இந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வரமாகத தான் எண்ணுகிறோம்.நேப்கின்கள் உண்மையில் வரமா? சாபமா? என்பதைக்காணலாம்.
நான் மடீட்சியாவில் ஒரு சுயசார்பு பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தேன் அங்கே வகுப்பு நடத்தியவர் நேப்கினை பிரித்து(கிழித்து) காட்டினார் உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது மேலே ஒரு லேயர் பிளாஸ்டிக் நடுவில் பஞ்சுத்துகள் போன்ற பொருள் அடியில் உள்ளதும் பிளாஸ்டிக்.
அப்படியானால் நாம் இத்தனை நாளாய் அரசு தடைசெய்த பிளாஸ்டிக்கையா சிறந்தது என சொல்லிக்கொண்டு வைத்துக்கொண்டு ம் இருக்கிறோம் எனக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சிதான்.
அடுத்து அவர் கூறிய விஷயம் நெஞ்சையே அடைத்துவிட்டது."சூப்பர்சாப்ட் அப்சார்ப்" என விளம்பரப்படுத்தப்படும் அந்த லேயர் மரத்துகள்களை குளோரின் டையாக்சைன் எனப்படும் கெமிக்கலால் பிளீச் செய்யப்பட்டு வெள்ளை நிறபஞ்சுபோன்ற பொருளாக மாற்றப்படுகிறது இதனால் என்ன கேடு எனக்கேட்கிறீர்களா.
நமக்கு உண்மையில் ஒருவாய் என நினைத்துக்கொண்டால் அதுத்தவறு.நம் உடலில் மூன்று விதமான வாய்கள் இருக்கின்றன முதலாவது உண்ணும் வாய் இரண்டாவது துகள்கள் எனப்படும் தோளில் இருக்கும் துவாரங்கள்,மூன்றாவது வாய் பிறப்புறுப்பாகும்.எந்தவாய்வழியே கழிவு சென்றாலும் கேடுதான் விளையும் நம் உடலில் கழிவுகள் வெளியேற்றப்படும்போது அதை உறிஞ்சிக்கொள்ளத்தான் நேப்கின் வைக்கிறோம்.ஆனால் குளோரின் டையாக்சைன் வேதிப்பொருள்
குளோரின் டையாக்சைன் வேதிப்பொருள் தண்ணீரை ஊற்றினால் அதீத கொதிநிலைக்கு கொண்டுசென்று விஷவாயுவை வெளிப்படுத்தும்.இதுதான் நம் உடலிலும் நிகழ்கிறது உதிரப்போக்கு வெளியேறும்போது உடல் அதிக வெப்பநிலையில் இருப்பதால் நேப்கினில் உள்ள குளோரின்டையாக்சைன் ஒரு விதவிஷவாயுவை வெளிப்படுத்தும் இந்த வாயுவானது வெளியே செல்வதற்கு வழியில்லாமல் நம் உடலுக்குள்ளேயே மீண்டும் செல்லும் ஆசனவாய் வய்வழியாக.இதுதான் இன்றையஸகாலகட்டத்தில் கருப்பை கோளாறுகள்,வளர்ச்சியில்லாத குழந்தை பிறப்பு,நீர்க்கட்டி,கருப்பை கேன்சர் போன்றவற்றின் அடித்தளம்.அன்று நம் பாட்டிமார்கள் பத்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட அதே தாய்நாட்டில்தான் நாமும் இருக்கிறோம்.ஆனால் ஒற்றைக்குழந்தை பெறுவதே பெரிய சவாலாய் மாறியதற்கு காரணம் நாம்தான்.அதுவும் சுகப்பிரசவம் என்பது ஆச்சர்யகுறியாய் மாறிவிட்டது. பணிரெண்டு மனிநேர பாதுகாப்பு என்று சொல்லப்படும் நேப்கின்களின் ஈரத்தன்மையால் எளிதில் நம் உடலில் ஃபன்கல் இன்பெக்ஷன்(பூஞ்சைத்தொற்று) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இதற்குமேலும் பலவிதமான நோய்கள் குறிப்பாக செர்விக்கல் கேன்சர்,யூரினல் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது.பழமைகளை கிடத்தி புதுமை செய்கிறோமென அமிர்த கலசத்தை தூக்கியெறிந்து நஞ்சினை உண்ணாதீர்கள். நீங்களே சற்று சிந்தியுங்கள் தெரிந்தும் தவறு செய்ய வேண்டாம் துணி நேப்கின்களையும்,மென்சுரேசனல் கப்களையும் பயன்படுத்தி பயன்பெறுவோம்.
சகோக்களே ,சகிக்களேஇது கூச்சப்பட வேண்டிய விஷயமல்ல விழிப்புணர்வு கொள்ள வேண்டிய விஷயம்.மாற்றங்கள் வேண்டும் எந்நாளும்.உங்கள் சகோதரியாய் இந்த பதிவை பதிவிட்டுள்ளேன் படித்து பயன்பெறுங்கள்.


Comments